Enter your keyword

சாக்ரமெண்டோவின் முதன்மையான தமிழ்க் கல்விக்கழகம்

சாக்ரமெண்டோ வாழ் தமிழ் மக்கள் தமிழ் மொழி கற்கவும், கற்பிக்கவும், வளர்க்கவும் உருவாக்கப்பட்டது இந்த தமிழ்க் கல்விக்கழகம். தமிழின் மொழிவளத்தை எடுத்துரைக்கவும், நம் கலாச்சாரத்தை வரும் தலைமுறை தமிழர்களுக்கு நினைவூட்டவும் உழைப்பதே கடமையாய் ஏற்று நடக்கிறோம்.

எங்கள் வழி

பள்ளி மாணவர்களுக்கும், இளம் சிறார்களுக்கும், ஆர்வமுள்ள அனைவருக்கும் அன்னை தமிழை பயிற்றுவிக்கிறோம். பிறமொழி பாடக்கல்விக்கு உதவிடும் எங்கள் கல்வித்திட்டம் மாணவர்களின் பள்ளிக்கல்வியின் ஒரு அங்கமாகும் தகுதியுடையது.

எங்கள் குறி

செம்மொழியாம் தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் மூலம் தமிழ் இலக்கணம், இலக்கியங்கள், வரலாறு, அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுத் தருவதும், இவை சார்ந்த நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதும் சாக்ரமெண்டோ தமிழ்க்கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.

எங்கள் பணி

புலம்பெயர்ந்து சாக்ரமெண்டோ, கலிஃபோர்னியா சுற்று வட்டாரத்தில் வாழும் தமிழ் கற்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் கற்றுத்தருவதை தலையாயப் பணியாய் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது , சாக்ரமெண்டோ தமிழ்க் கல்விக்கழகம்.

வந்தாரை வாழ வைப்பது தமிழர் பண்பு

சென்ற இடமெல்லாம் தழைப்பது தமிழின் பண்பு

தொடர்பு கொள்ளுங்கள்
தமிழ் வளர்ப்போம்

தமிழ் கற்க ஆர்வமுள்ளவரா? STA/ITA வகுப்புகளின் பாடத்திட்டத்தில் தமிழை பிழையின்றி படிக்க, எழுத மற்றும் பேச கற்று கொள்ளுங்கள்

தேர்ந்த கல்வியாளர்கள்

எங்கள் STA/ITA தமிழை தெளிவுற கற்பிக்க தேர்ந்த ஆசிரியர்களையும் அவர்களை மாணவரோடு இணைக்கும் மென்கட்டுமானத்தையும் கொண்டது.

தெளிந்த பாடத்திட்டம்

STA/ITA தமிழ் கல்வியை தெளிவாக திட்டமிட்டு, நிரூபிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக வகுத்தளிக்கிறது.

தமிழின் அங்கீகாரம்

கற்றலின் அங்கீகாரமாக STA/ITA அதன் மாணவர்களுக்கு அங்கீகார சான்றிதழும் வழங்கி கவுரவிக்கும்.

பதிவு செய்யுங்கள்

சாக்ரமெண்டோ தமிழ்க்கழகம் (STA) உலகத் தமிழ்க் கல்விக்கழத்துடன் (International Tamil Academy) இணைந்தது (இது கலிபோர்னியா தமிழ்க் கல்விக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது).

https://www.catamilacademy.org/ எனும் இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது பள்ளி இடைவிடத்தில் Sacramento Tamil Academy எனும் வாய்ப்பை தேர்ந்தெடுக்கவும்.

இனிவரும் நிகழ்வுகள்

STA விழாக்களில் பங்குபெருங்கள்

திருக்குறள்

214

மாணவர்கள்

22

ஆசிரியர்கள்

20

வகுப்புகள்(grades pre-k1 to 8)

கனவும் பாதையும்

STA/ITA வில் தமிழ் கல்வியின் இறுதி ஆண்டு வெற்றிகரமாக முடித்த மாணவர்கள்

  • தங்கள் சகாக்களுடன் தமிழில் தயக்கமின்றி சரளமாக பேசுவார்கள் மற்றும் யோசனை பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள்
  • பிழைகள் இல்லாமல் தமிழில் எழுதுவார்கள்
  • தமிழை படித்து புரிந்து கொள்வார்கள்
  • ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்க முடியும்
  • தமிழ் மொழியின் மகத்துவம் மற்றும் வரலாறு மற்றும் தமிழ் கற்றலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள்
  • மற்றவர்களுக்கு தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்பிப்பார்